Breaking News

சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 73ஆவது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களில் 2021 பெப்ரவரி 01ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 

அரச நிறுவனங்கள் அமைந்துள்ள அனைத்துக் கட்டிடங்களிலும் 2021 பெப்ரவரி மாதம் 03 ஆம் 04 ஆம் தினங்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும், குறித்த இராஜாங்க அமைச்சு அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. 

73ஆவது சுதந்திர தின விழா இம்முறை "வளமான எதிர்காலமும் - சுபீட்சமான தாய்நாடும்" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் நெறிப்படுத்தலில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிகவும் அபிமானத்துடன் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


(றாசிக் நபாயிஸ்)
ஊடகவியலாளர்



No comments

note