அமைச்சர் வாசுதேவ சுகம்பெற மேயர் றகீப் பிரார்த்தனை
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விரைவில் பூரண சுகம்பெற வேண்டுமென பிரார்த்திப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என அரசாங்கத்தினுள் இருந்து கொண்டே குரல் எழுப்பி வந்துள்ளார்.
அத்துடன் அத்தகைய உடலங்களை அடக்குவதற்கு நிலக்கீழ் நீர் மட்டம் ஆழமாக இருக்கின்ற இடமொன்று வேண்டும் என்று பிரதமரினால் கோரப்பட்டபோது, அதனைத் துரிதமாக ஆராய்ந்து, பரிந்துரை செய்திருந்தார்.
இவ்வாறு எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமையை பெரிதும் மதித்து செயற்படுகின்ற பழம்பெரும் இடதுசாரித் தலைவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து கவலையடைகின்றோம்.
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில், எமது முஸ்லிம் சமூகத்திற்கு ஆறுதலான சக்தியாகத் திகழ்கின்ற அன்னார் வெகுவிரைவில் குணமடைந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
No comments