நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்.!
மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்
குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பினால் கல்முனை கல்வி வலய நற்பிட்டிமுனை கமு/ கமு/ லாபீர் வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ரைஸுல் ஹக்கீம் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
No comments