அக்கரைப்பற்றில் பாடசாலைகளை மீள திறக்க முன்னாயத்த ஏற்பாடுகள் தீவிரம் !
நூருல் ஹுதா உமர்
கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக மிக நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (11) திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளை துப்பரவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இன்று அக்கரைப்பற்று தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு பாடசாலைகளையும் துப்பரவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கைகளில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், செயலாளர்,உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
அக்கரைப்பற்று பிரதேச சபை சுகாதார ஊழியர்களினால் கொரோனா தொற்று நீக்கிகள் விசிறப்பட்டதுடன் டெங்கு பரவும் இடங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
No comments