Breaking News

குவைத் நிறுவன அனுசரணையில் சாய்ந்தமருது அல்- ஹிலாலுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்.!

மாளிகைக்காடு நிருபர்

குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பினால் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இன்று  திங்கட்கிழமை நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள்,  பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர்  வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின்  பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றஸ்மி பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை  நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். வைஸால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை செயலாளருமான பொறியியலாளர் ஏ.எம். சாக்கிர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ. எல். என். ஹுதா, அக்கரைப்பற்று தொழிநுட்ப கல்லூரி விரிவுரையாளர் இல்யாஸ் அப்துல்லாஹ், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர் யூ.எல்.அஸ்லின், பாடசாலை உதவி அதிபர் எம்.எச்.நுஸ்ரத் வேகம் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





No comments

note