"மாணவர் மகிமை" வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
(யாக்கூப் பஹாத்)
"மாணவர் மகிமை" வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு திறமை காட்டிய தேவையுடைய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2021.01.06 இடம்பெற்றது
வெஸ்ட் ஒப் யங் சமூகசேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலக சமூகப் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ரீ எம் எம் அன்சார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்
இதன் போதும் முதற்கட்டமாக நிந்தவூர் கமு/கமு/ இமாம் கஸ்ஸாலி ம. வித்தியாலய மாணவர்கள் 15 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களான எஸ் எஸ் சந்திரகுமார், ஏ எல் பைசால், சமூக பராமரிப்பு நிலையத்தின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி எச் ஏ அப்துல் ஜப்பார், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம் ஏ எம் சியாம், எஸ் எல் எம் அர்ஷாத் அலி, வெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ.புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்
இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி பயிலும் தேவையுடைய சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்கள் சுமார் 400 பேர்க்கு புத்தகப் பைகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் உபகரணங்களை உள்ளிட்ட ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட உள்ளன
இதற்கென இவ்வாண்டு 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபா நிதியை பெஸ்ட் ஒப் யங் சமூகசேவைகள் அமைப்பு செலவிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments