Breaking News

ஸ்ரீலங்கா கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த புள்ளிக் கணிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (30) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அம்பாறை காரியாலயத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சன்ஜய ஜயசிங்க அவர்களும் மற்றும் அதன் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழியில் சித்தியடைந்த 06 பேருக்கும் தமிழ் மொழியில் சித்தியடைந்த 03 பேருமாக மொத்தமாக தெரிவு செய்யப்பட்ட  புதிய 09 
(சிங்களம்-06, முஸ்லிம்-02, தமிழ்-01) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புள்ளிக்கணிப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.


றாசிக் நபாயிஸ் - 
ஊடகவியலாளர்





No comments

note