கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விசேட ஒன்று கூடல்
(சர்ஜுன் லாபீர், எம்.என்.எம்.அப்றாஸ்,ராசீக் நபாயீஸ்)
சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்க அமைப்பின்(PCA) கீழ் இயங்கும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் வீசேட ஒன்று கூடல் நிகழ்வு இன்று (30) சனிக்கிழமை காலை 9.30மணிக்கு கல்முனை ஹிமாயா வீச் ஹோட்டலில் கல்முனை பிரதேச நல்லிணக்க அமைப்பின் செயற்பாட்டாளர் எஸ்.எல்.ஏ அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சமாதானம் மற்றும் சமூக நல்லிணக்க அமைப்பின்(PCA) தேசிய இணைப்பாளர் டி.இரஜந்திரன் கலந்து கொண்டு அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் அமைப்பின் தேசிய ரீதியான செயற்பாடுகளை விபரித்தார்.
மேலும் இந் நிகழ்வில் சமாதான நல்லிணக்க அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.எல்.ஏ மாஜீத் உட்பட கல்முனை பிரதேச நல்லிணக்க் குழுவின் உறுப்பினர்கள் என பல்ர் கலந்து கொண்டனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments