Breaking News

ஐ.தே.க.பொது செயலாளராக நியமனம் பெற்றுள்ள பாலித ரங்கே பண்டாரவுக்கு புத்தளம் மாவட்ட மக்கள் வாழ்த்து தெரிவிப்பு!!!.

ஐக்கிய தேசிய கட்சியின் செயட்குழு கூட்டம் நேற்று முன் தினம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் போது கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தின்  முன்னாள் பாராளுமன்ற    உறுப்பினர்  பாலித்த ரங்கே பண்டாரவிற்கு கட்சியின் பொது செயலாளர் பதிவி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட மக்கள் சார்பாக பாலித ரங்கே பண்டார அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ரபாத் அமீன் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான  பாலித ரங்கே பண்டார தொடர்ச்சியாக 20 வருடங்கள் பாராளுமன்ற உறுபினராக இருந்து வந்துள்ளமை குறிபிடத்தக்கதாகும்.




No comments

note