நான் யாருக்கும் பயப்பட போவதில்லை எங்களின் கட்சி தலைவர் பிழை செய்தாலும் அது தொடர்பில் தட்டி கேட்பேன் : காரைதீவு தவிசாளர் ஜெயசிறில்.
நூருல் ஹுதா உமர்
அரசின் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு பங்கீட்டிலையே இந்த நாட்டின் நீதி தெரிகிறது. விண்ணப்பித்தவர்கள் யாரோ இருக்க தொழில்கள் பங்கிடுவது யாரோ பெறுவது யாரோ என இருக்கிறது. இனிமேல் காரைதீவு பிரதேச எல்லையினுள் வளவு விற்பனைக்கு என புதிய நடைமுறையை அமுல்படுத்த உள்ளோம். நான் யாருக்கும் பயப்பட போவதில்லை எங்களின் கட்சி தலைவர் பிழை செய்தாலும் அது தொடர்பில் தட்டி கேட்பேன். என் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தார்கள். நான் மாவீரர் தினம் கொண்டாடுவதாக பேசினார்கள், ஊழல் செய்துள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளார்கள் இதுதொடர்பில் எனக்கு எவ்வித அச்சமுமில்லை என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தெரிவித்தார்.
நேற்று காலை காரைதீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அவர்,
எந்த முடிவையும் தீர ஆராய்ந்து எடுப்பதே சிறந்தது. எமது காரைதீவு பிரதேசத்தில் 50 பேரளவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். அதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவது கவலையளிக்கிறது. பாடசாலைகளுக்கு தொற்றுநீக்கி விசுறும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்த வெளியூர் வியாபாரிகளை எங்களின் எல்லைகளுக்குள் வர்த்தகம் செய்ய அனுமதிப்பதில்லை. உள்ளூர் வியாபாரிகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்க அறிவுறுத்தி வருகிறோம். கடந்த வாரமும் கூட பக்கத்து ஊர் வர்த்தக சங்கம் எங்களின் வர்த்தகர்களை கட்டுப்படுத்த முனைந்தபோது ஒன்றுபட்டு அந்த காரியத்தை முறியடித்தோம்.
எங்களின் எல்லைகளில் எங்களின் அனுமதி பெறாமல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா காபட் வீதியை இடுவதற்கு ஆயத்தங்களை செய்து வருகிறார். அவர்கள் தரப்பிலிருந்து எங்களிடம் எவ்வித அனுமதிகளையும் யாரும் பெறப்படவில்லை. இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மக்களுக்கு நலவான எந்த வேலைத்திட்டத்தையும் முறையாக அணுகினால் நாங்கள் அனுமதிக்க தயாராக உள்ளோம்.
அரசின் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு பங்கீட்டிலையே இந்த நாட்டின் நீதி தெரிகிறது. விண்ணப்பித்தவர்கள் யாரோ இருக்க தொழில்கள் பங்கிடுவது யாரோ பெறுவது யாரோ என இருக்கிறது. இனிமேல் காரைதீவு பிரதேச எல்லையினுள் வளவு விற்பனைக்கு என புதிய நடைமுறையை அமுல்படுத்த உள்ளோம். நான் யாருக்கும் பயப்பட போவதில்லை எங்களின் கட்சி தலைவர் பிழை செய்தாலும் அது தொடர்பில் தட்டி கேட்பேன். என் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தார்கள். நான் மாவீரர் தினம் கொண்டாடுவதாக பேசினார்கள், ஊழல் செய்துள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளார்கள் இதுதொடர்பில் எனக்கு எவ்வித அச்சமுமில்லை.
எங்களின் பிரதித்தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் மீது வந்திருக்கும் ஒழுக்காற்று விசாரணை பிரேரணையை முதலாமவராக நான் ஆதரிக்கிறேன். என்னை பொதுமக்கள் மத்தியில்வைத்து அவமானப்படுத்தினார். கிராம சேவகர், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரியை அவமானப்படுத்தினார். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் எங்களுக்கு அதிகாரம் இல்லையென்றும் கூறி எங்களை வெளியேற சொன்னார். எல்லா விடயங்களும் என்னிடம் ஆதாரமாக உள்ளது. என்னை இனவாதியாக சித்தரித்து பள்ளிவாசல்களில் துண்டுப்பிரசுரம் வெளியிடுகிறார்கள். எங்களை அச்சுறுத்தியவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதே சரி என்றார்.
இது தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்று பாரிய பிரச்சினைகளுடன் முடிவில்லாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
No comments