"ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதித்தால் கொரோனா நோய்த் தொற்றை இலகுவாக கட்டுப்படுத்தலாம்"!.
"ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதித்தால் கொரோனா நோய்த் தொற்றை இலகுவாக கட்டுப்படுத்தலாம்".-டொக்டர் அகிலன் - சுகாதார வைத்திய அதிகாரி
ஜனாசாக்களை எரித்துவிடுவார்கள் என்ற பயத்தினாலேயே மக்கள் PCR பரிசோதனைக்கு முன்வருவதற்குப் பயப்படுகின்றார்கள்.
அப்படி இருந்தும் அட்டாளைச்சேனை 8ல் ஒரு யுவதி தானாக முன்வந்து தான் பொருட்கள் வாங்கிய கடைக்காறர் தனக்கு 20 ரூபா மீதியை தரும் போது இருமல் இருந்ததால் காசைவாங்க மறுத்து அதற்குப் பதிலாக பொருள் ஒன்றை தனது பேக்கில் போடுமாறு கூறியிருந்தார். இருந்தும் அவர் கடைக்கரருக்கு PCR பொசிட்டிவ் என்று கேள்விப்பட்டதும் தானாக முன்வந்து பரிசோதித்த போது அவருக்கும் PCR பொசிட்டிவ் ஆக இருந்தது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது கல்முனைப் பிராந்தியத்தில் 900க்கும் அதிகமான நோய் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது எழுமாறான பரிசோதனைகளில் அடையாளங்காணப்பட்டது, இதில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனைப்பிரதேசத்தைச் சேர்ந்தோர்400 பேராகும். சுமார் 2000 பேரளவில் பிராந்தியத்தில் நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்க முடியும் என எதிர்வு கூறலாம். இந்நிலையில் எதிர்காலம்பற்றிய அச்சமுள்ளது.
எனவே ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தால் PCR பரிசோதனைக்கு மக்கள் தாமாக முன்வருவார்கள்.
என்று ஆலையடிவேம்பில் அம்பாரை மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடை பெற்ற கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அகிலன் தெரிவித்தார்.
No comments