பிரபல நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்கள் அதிரடியாகக் கைது
ஸ்வர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைய குறித்த மூவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ETI பினான்ஸ் நிதி நிறுவனம் மற்றும் ஸ்வர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் குழுவினரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், குறித்த மூவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 13 தசம் 7 பில்லியன் ரூபா பெறுமதியான வைப்புகளை சட்ட விரோதமாக ஏற்றுக் கொண்டமை, முறைகேடு மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நிறுவன முன்னாள் பணிப்பாளர்கள் மீது குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments