ஹக்கீம் மற்றும் தயாசிரியின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பாராட்டு
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் தயாசிரியின் முன்மாதிரியான நடவடிக்கைக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
முன்னதாக சில பிரபலங்கள் தங்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்ட போது அதனை மறைத்து தனியார் வைத்தியசாலைகளில் சிகிற்சை பெற்றுக்கொண்ட தகவல்கள் தங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தங்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதை மறைக்காமல் ரவூப் ஹக்கீம் மற்றும் தயாசிரியின் முன்மாதிரியான மற்றும் பொறுப்பான நடவடிக்கைக்கு பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments