ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில்...
(ரிப்தி அலி ,சர்ஜுன் லாபீர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்னும் சில தினங்களில் இவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கொரோனா வைரஸ் தொற்று என இன்று (10) ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நசீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போது சுய தனிமைப்படுத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments