Breaking News

கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் 2021ஆம் ஆண்டுக்கான திறன் அபிவிருத்திப் பாடநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் பூரண அனுசரணையில் கல்முனை கலாசார மத்திய நிலையத்தினால் நடாத்தப்படவிருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான திறன் அபிவிருத்தி பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் உரிய தகைமைகள் உள்ளவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது. இதில்
பாடசாலையில் கல்வி பயில்வோர், பாடசாலையை விட்டும் வெளியேறியவர்கள், அரச அலுவலகங்களில் சேவையாற்றுவோர் போன்றோர் இப்பாட நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

முற்றிலும் இலவசமாக பத்து மாத காலம் பகுதி நேரமாக கற்பிக்கப்படும் பாடநெறிகளாக 
சிங்களம், ஆங்கிலம், பொல்லடி, அரபு எழுத்தாணிக்கலை மற்றும் சித்திரம் போன்ற பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை அலுவலக நேரத்தில் பெறமுடியும்.
இப்பாட நெறியின் அங்குராப்பண நிகழ்வு பெப்ரவரி இரண்டாம் திகதி நாடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மருதமுனை காரியப்பர் வீதியில் அமைந்துள்ள இம்மத்திய நிலையத்தில் இப்பாடநெறிகள் அனைத்தும் இடம் பெறுவதோடு இப்பாடநெறிகளை பூரணமாக பூர்த்தி செய்பவர்களுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் என இம்மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜ.எல்.றிஸ்வான் தெரிவித்தார்.



No comments

note