Breaking News

ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனினால் 2021ம் வருடத்திற்கான தரம் 6-11வரையான வறிய மணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஏ ஆர் மன்சூர் பவுண்டேஷனினால்  வருடாவருடம் வழங்கி வருகின்றனர். இம்முறை வறிய குடும்பங்களைச் சேர்ந்த கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  சாய்ந்தமருது கல்முனை நற்பிட்டிமுனை மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  இப் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் அவர்களினால் அவரது உத்தியோகபூர்வ  இல்லத்தில்  வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு தற்போதைய நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்நாட்டின் சுகாதாரத்துறையினரின் முழு வழிகாட்டுதலுக்கும் ஏற்ப இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் அர்ஷாத் காரியப்பர் அவர்களின் முழு கண்காணிப்பில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வை சரிவர நடத்திமுடிக்க பயனாளிகளை  தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்  சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வு ஏ. ஆர். மன்சூர் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவி சட்டத்தரணி எனது சகோதரி மர்யம் நளீமுடீன் அவர்களின் முழு அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  இதற்காக கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர் விஷேட நன்றியினைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி சரிவர நெறிப்படுத்திய ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் உறுப்பினர்கள் மற்றும் எனது நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வுக்கு கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத்  மன்சூர் விஷேட அதிதியாக கலந்து இக்கற்றல் உபகரணங்களை தனது கரத்தினால் வழங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.














No comments

note