மகப்பேற்று வைத்திய நிபுணருக்கு(VOG) கொரோனா தொற்று இல்லை.
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கல்முனையில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகளில் மகப்பேற்று வைத்திய நிபுணராக கடமையாற்றும் டாக்டர் ரஜீவ் விதானகேவின் அண்டிஜன் பரிசோதனை(RAT)முடிவு நெகட்டீவாக வந்துள்ளதாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்
ரகுமான் தெரிவித்துள்ளார்.
சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணருக்கு கொரோனா தெற்று உள்ளதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
மேலும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் எந்தவொரு வைத்திய நிபுனர்களுக்கும் கொரோனா தெற்று இல்லை என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே பொதுமக்கள் இவ்வாறான உண்மைக்கு புறம்பான போலியான தகவல்களை நம்ப வேண்டும். எனவும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சேவையாது அதன் தரத்தில் எவ்வித குறைகளும் இன்றி முன்னெடுக்கப்படும் என்பதனையும் எமது சேவைபெறுனர்கள் (பொதுமக்கள் ) அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.என வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப் ரகுமான் குறிப்பிட்டார்.
No comments