புத்தளம் பிரதேச சபையில் ஜனாசா எரிப்புக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்!
புத்தளம் பிரதேச சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் தலைவர் அஞ்சன சந்தருவன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தொடரில் கொரோனாவால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்க கூடாது என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்ட சபையின் எதிர்கட்சி உறுப்பினர் (பொது ஜன பெரமுன) சபையிலிருந்து வெளிநடப்பு செய்ய, சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு (ஐ.தே.க. ,மு.கா, சுயட்சை) ஜனாசா எரிப்புக்கு எதிரான பிரேரணை 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக-
ஐக்கிய தேசிய கட்சியின் 07 பேரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் 03 பேரும், சுயற்சை கட்சிகளில் இருவருமாக 12 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
பொதுஜன பெரமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
- இர்பான் றிஸ்வான் -
No comments