பொது அமைப்புகளும் ஜும்மா பள்ளிவாசலும் இணைந்து "கவன் சீலை போராட்டம்" சாய்ந்தமருதில் முன்னெடுப்பு !
நூருல் ஹுதா உமர்
கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் நிலையான தீர்மானம் இல்லாது எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக சாய்ந்தமருது அல்- அக்பர் ஜும்மா பள்ளிவாசல், அல்-மீஸான் பௌண்டஷன் - ஸ்ரீலங்கா, மருதம் கலை கூடல் இணைந்து சாய்ந்தமருது அல்- அக்பர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னாள் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் "கபன் சீலை போராட்டம்" எனும் போராட்டம் ஒன்றை சனிக்கிழமை முன்னெடுத்தனர்.
அல்- மீஸான் பௌண்டஷன் - ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமர், சாய்ந்தமருது அல்- அக்பர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.இஸ்ஸதீன், மற்றும் மருதம் கலை கூடல் தலைவர் அஸ்வான் எஸ் மௌலானா, உட்பட அமைப்புக்களின் செயலாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments