கல்முனையின் ஒரு பகுதி முடக்கம் : வீதியோரத்தில் பட்டினியில் வாடும் இல்லிடமற்ற ஏழைகள் !!
நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர செயிலான் வீதி முதல் கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு கடந்த மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கல்முனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் உள் வீதிகள் மற்றும் பிரதான வீதி சன நடமாற்றங்களோ பெரியளவிலான போக்குவரத்துக்களோ இல்லாது மௌனமாக காட்சியளிப்பதுடன் கல்முனை உணவகங்களை நம்பி வாழும் ஏழை முதியோர்களும் உணவுகளில்லாது பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பு நடவடிக்கையும் சுகாதார நடவடிக்கைகளும் குறித்த பிரதேசத்தில் அமுலில் இருந்து வருகின்றது. கல்முனையில் அமுலில் உள்ள பகுதிவாரியான தனிமைப்படுத்தலால் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வும் உறுப்பினர்கள் வருகை தந்திருந்த போதிலும் இன்று நடைபெறவில்லை.
No comments