இலங்கையில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமை விசயத்தில் மாலைதீவு தலையிடக் கூடாது ; - மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்...!!!
ஜனாஸாக்களை மாலைதீவுக்குக் கொண்டு செல்வதெனும் போர்வையில் இலங்கையில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதற்கு மாலைதீவு தலையிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம்.
இலங்கையிலுள்ள மாலை தீவு தூதரகத்துக்கு இன்று மின்னஞ்சல் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், இதனை மாலை தீவு வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார்.
இதேவேளை, பல நாடுகளில் மாலைதீவு தூதரகத்துக்கு முஸ்லிம் சமூக அமைப்புகள் கடிதங்களை அனுப்பி வருவதுடன் மாலைதீவு இவ்விடயத்தில் இலங்கை அரசின் வலையில் சிக்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments