Breaking News

வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புக்கள் : அதிகாரிகளின் நடவடிக்கையினால் சுமூக தீர்வு கிட்டியது.

நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை, மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பரவலாக பரவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதன் ஒரு கட்டமாக தொடர் மழையினால் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தில் குடியிருப்பு வீடுகளில் வெள்ள நீர் புகுந்தமையால் பிரதேசத்தில் உள்ள மக்கள் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிந்தவூர்- காரைதீவை பிரிக்கும் வெட்டுவாய்க்காலை கடலுடன் இணைத்துவிடுமாறு கோரியதிற்கிணங்க இன்று மாலை அந்த வெட்டுவாய்க்காலை வெட்டி வெள்ள நீரை கடலுடன் சேர்த்துவிட நடவடிக்கை எடுத்தபோது இந்து மாயணம் வெள்ளத்தில் அள்ளுண்டுபுகும் அபாயம் உள்ளதாக தெரிவித்து மக்களிடையே சிறிய அதிருப்தி நிலை தோன்றியது. 

நிலைமையறிந்து உடனடியாக களத்திற்கு விரைந்த காரைதீவு பிரதேச செயலாளர், சம்மாந்துறை பொலிஸார், படை வீரர்கள் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எஸ். ஜெயராணி ஆகியோர் விடயம் தொடர்பில் சுமூகமாக பேசி நீர் வடிந்தோடிய பின்னர் கடலையும் வெட்டுவாய்க்காலையும் இணைக்கும் வாயை அடைத்துவிடுவதாக முடிவெடுத்து வெள்ளநீரை வடிந்தோட செய்ய நடவடிக்கை எடுத்தனர்.








No comments

note