கள அலுவலர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கும் செயற்திட்டம்.
(சர்ஜுன் லாபீர்)
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவின் தலைமையில் கடந்த 2020.11.27 அன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கள அலுவலர்களுக்கு புதிய மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டம் மீண்டும் செயற்படுத்தப்படவுள்ளது.
அந்த வகையில் 31.01.2014 க்குப் பிறகு நியமனங்களைப் பெற்று நிரந்தரமாக 05 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த கிராம சேவகர்கள் உள்ளிட்ட கள அலுவலர்களுக்கு இத் திட்டத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 17.12.2020ம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு தங்களுடைய பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
No comments