கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கல்வி மேம்பாட்டுக்காக சமூக சேவையாளர் எம்.ஐ. சம்சுதீன் நிதியுதவி.
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரி விணாத்தாள்களை அச்சிட்டு வழங்குவதற்கான கடதாசிகளையும், (PHOTO COPY PAPER) மற்றும் பிரதியிடும் இயந்திரத்திற்கான (TONER) கொள்வனவு செய்வதற்காக சுமார் 35,000/= ரூபாவை இப்பிராந்தியத்தில் வசிக்கின்ற சமூக சேவையாளரும், முன்னாள் சமுர்த்தி உத்தியோகத்தருமான எம்.ஐ. சம்சுதீன் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் எம்.டீ.எம்.பாரி பகுதித்தலைவர் ஐ. முஸாதிக் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
K.M.C.C. MEDIA UNIT.
No comments