நிந்தவூரிலும் “கவன் சீலை போராட்டம்” முன்னெடுப்பு!
(யாக்கூப் பஹாத்)
கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்ற நிலையில்,
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்துற்கு முன்னாள் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் "கவன் சீலை போராட்டம்" நிந்தவூர் வாழ் பொது மக்களும் இளைஞர்களும் இணைந்து இப் போராட்டத்தை இன்று மாலை முன்னெடுத்தனர்.
No comments