Breaking News

கல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை செய்லான் வீதியிலிருந்து அம்மன்கோயில் வரை உள்ள பாதைகள் அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை மாநகர முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் சுமார் 15 ற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மேலும் தொற்றாளர்களை இனங்காணும் வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்க அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கல்முனை செயிலான் வீதி,கடற்கரைப் பள்ளி வீதி,மாதவன் வீதி மாரியார் வீதி,சின்னத்தம்பி வீதி,உடையர் வீதி,கோயில் வீதி வரையான இடங்கள் இன்று புதன்கிழமை இரவு 7.00 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதா வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் மேற்படி பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுகிறது.



No comments

note