இலங்கை அஞ்சல் திணைக்களம், இக்காலத்தில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை காலடிக்கு சென்று வழங்கி வருகின்றது : உப தபாலதிபர் எம்.எம்.ஏ. முபாரக்.
நூருள் ஹுதா உமர்.
பொதுமக்களின் மின்சார பட்டியல், தொலைபேசி கொடுப்பனவுகள், விரைவு பணப் பரிமாற்றம், வாகன காப்புறுதி சமூக சேவை கொடுப்பனவுகள், தேசிய சேமிப்பு வங்கி பணக்கொடுக்கல் வாங்கல்கள், போன்ற சேவைகளை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி தபாலகங்கள், உப தபாலகங்கள் மற்றும் உங்கள் வீட்டுக்கு கடிதங்களை கொண்டுவரும் தபாற்காரர்களிடம் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி தபாலக உப தபாலதிபர் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார்.
மேலும் தனது அறிக்கையில்,
கொரோனா தொற்றின் வீச்சு அதிகமாக உள்ள இச்சூழ்நிலையில் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை பேணி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி இலங்கை அஞ்சல் திணைக்களம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.
கடந்த 201 வருடங்களாக தனித்துவமாக சேவையாற்றிவரும் மிகப்பெரும் வலையமைப்பான இலங்கை அஞ்சல் சேவை பொதுமக்களின் இரகசியங்ககளை பாதுகாத்து அவர்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகளையும் பெற்றுள்ள எமது இலங்கை அஞ்சல் திணைக்களம் மக்களின் காலடிக்கு சென்று சேவையாற்ற எப்போது தயாராகவே உள்ளது என்றார்.
No comments