கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியின் சேவையை பாராட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விருது வழங்கி கௌரவிப்பு....
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பொதுச்சுகாதார சேவையினை மக்களுக்கு செய்து வெற்றிகண்ட எமது கல்முனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னிக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறுபட்ட சுகாதார நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் சுகாதார வைத்திய அதிகாரியை மேலும் ஊக்குவிக்கும் முகமாக இவ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கல்முனைப் பிரதேசத்திற்கு இப்படியான ஒரு வைத்தியர் கடமையில் இருப்பது எமக்கு மிகவும் திருப்தியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் அதே வேளை இப்பிரதேச மக்களுக்கு ஒரு அருட்கொடையாகும் அதேவேளை அவரது சகல சேவைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பாட்டால் எமது பிரதேசத்திற்கு வெற்றி நிச்சயம் அமையும் எனவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments