தனிமைப்படுத்தல் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிலோன் மீடியா போரம் !
(ஐ.எல்.எம்.நாஸிம், அபு ஹின்சா )
கடந்த மூன்று வாரங்களாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஊடகவியலாளர்களின் நன்மை கருதி சிலோன் மீடியா போரத்தினால் உலருணவுகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) மாலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.நஸீல், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீட், செயலாளர் எம்.எஸ்.எம். முஜாஹித், பொருளாளர் யூ.எல்.என். ஹுதா, பிரதித்தலைவர் எஸ். அஸ்ரப் கான், உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
இந்நிவாரண பொதிகளுக்கான அனுசரனையை கல்முனை, சாய்ந்தமருது பிரதேச தனவந்தர்கள் வழங்கியிருந்தனர்.
No comments