Breaking News

வெள்ளத்தில் நடந்து தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி !

நூருல் ஹுதா உமர்.

அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் கொவிட் தொற்றானது தொடர்ந்தும் அதிகரித்து செல்வதுடன் நேற்று மாலை வரை கல்முனை பிராந்தியத்தில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இதனால் அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வாழும் மக்களின் அன்றாட நிலைகள் மிகக்கஷ்டமாக உள்ளது. இதனை தனிக்கும் நோக்கில் அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, அட்டாளைசேனை பிரதேச சபை என்பனவும் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக பிரதேச தனவந்தர்களின் உதவியுடன் பிரதேசத்தில் பெய்துவரும் அடைமழையையும், வெள்ளப்பெருக்குகளையும் கவனத்தில் கொள்ளாது நிவாரண பணிகளை தொண்டர் அடிப்படையில் அப்பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் போதியளவில் இல்லாமல் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கல்முனை தெற்கில் 6 பேர், சாய்ந்தமருதில் 7, காரைதீவில் 1, நிந்தவூரில் 1, அக்கரைப்பற்றில் 116, அட்டாளைச்சேனையில் 21, ஆலையடிவேம்பு 5, திருக்கோவில் சுகாதார பிரிவில் 6, பொத்துவில் சுகாதார பிரிவில் 7, நாவிதன்வெளியில் 2, இறக்காமத்தில் 11 பேருமாக இதுவரை 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








No comments

note