காரைதீவு ,நிந்தவூர் பிரதேச கலை மன்றங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.
நூருள் ஹுதா உமர்.
காரைதீவு ,நிந்தவூர் பிரதேச செயலகங்களுக்கு கீழுள்ள பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக உதவித்தொகை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் வழிகாட்டலுக்கு அமைவாக, உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன் தலைமையில் இன்று (8) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான், காரைதீவு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வி.விக்னேஸ்வரன், நிந்தவூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.சுதர்சன் மற்றும் கலை மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments