Breaking News

நிந்தவூரின் மற்றுமொரு அடையாளம்

(யாக்கூப் பஹாத்)

கமு/கமு-அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தினால் (Ocean University of Sri Lanka) பொறியியல் முகாமைத்துவ பீடத்தின் இரு வேறு துறைகளுக்கு நாடளாவிய ரீதியில் நடாத்திய போட்டிப்பரீட்சை வாயிலாக அதிகூடுதலான புள்ளிகளைப்பெற்று தெரிவாகியுள்ளனர். 

எமது நிந்தவூர் மண்ணிலிருந்து முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர்கள் முறையே;

HKM.Jamseeth Hassan  
Bsc (Hons) in Coastal and Marine Resources Management. 

A. Aashif Ali 
BSc (Hons) in Maritime Transportation  Management and Logistics.

எமது பகுதி கடலையும் கடல்சார்ந்த கரையோரப்பகுதிகளையும் கொண்டிருப்பதால் இனிவரும் காலத்தில் இது போன்ற துறைகளுக்கும் அரச பல்கலைக்கழகங்கள் வாயிலாக எமது பகுதி மாணவர்கள் முயற்சி செய்தால்  கடலரிப்பு, மீன்பிடி பிரச்சினைகள், உயிருள்ள மற்றும் உயிரற்ற கடல் வளங்களின் அழிவு, துறைமுகங்கள், கடல் போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் அவற்றின் கொள்கைகள் ரீதியான பிரச்சினைகள் போன்ற பாரிய பிரச்சினைகளுக்கு  அது சார்ந்த கற்கைகளின் வாயிலாக தீர்வுகளை பெறலாம் என்பதில் ஐயமில்லை.




No comments

note