குவைத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் நாசர் சபா அல் - அஹ்மத் காலமானார்:
குவைத்தின் முதல் துணை பிரதமரும் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக்-நாசர்-அல்-அஹ்மத்-அல்-ஜாபர் அல்-சபா(வயது-72) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
குவைத்தில் உள்ள வெளிநாட்டினர் உள்பட அனைவருக்கும் தெரிந்த மறைந்த முன்னாள் குவைத் மன்னர் அமீர் ஷேக்-சபா-அல்-அஹ்மத்-அல்-ஜாபர்-அல்-சபா அவர்களின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
1948-ஏப்ரல் 27 அன்று பிறந்த ஷேக் நாசர்,உடல் நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். அவர் 2006 முதல் ராயல் கோர்ட்டின் தலைவராகவும் இருந்து வந்தார்.
மேலும் நாட்டின் முக்கிய மெகா திட்டங்களில் ஒன்றான சில்க் சிட்டிகாக கடினமான உழைத்த முக்கிய நபராக இருந்தார். அவரது உடல் நாளை (21/12/2020) திங்கள்கிழமை காலை 9:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்ற செய்தி வெளியிட்டுள்ளது.
No comments