கபன் துணி போராட்டத்தை றிஸாலா அமைப்பு ஆரம்பித்தது
(யாக்கூப் பஹாத்)
தேசிய பிரச்சினையாக மாறியுள்ள ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான கபன் துணி போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நிந்தவூர் றிஸாலா அமைப்பின் உறுப்பினர்களாகிய நாம் கபன் துணி வெள்ளைக் கொடிகளை ஊரின் பிரதான வீதிகளிலும், உள்ளூர் வீதிகளிலும் பறக்க விட்டுள்ளோம்.
ஜனாஸாவை அடக்கம் செய்தல் என்பது எமக்கு விதிக்கப்பட்டுள்ள பர்ளு கிபாயாவான சமூகக் கடமை. சமூக கடமை வேண்டுமென்று நிறைவேற்றப்பட வில்லையென்றால் சமூகத்திலுள்ள அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.
அச்சமூக உரிமையை வென்றெடுப்போம்.
வென்றெடுக்க தேசிய ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தோடு நாமும் கைகோர்த்துள்ளோம்.
இன்று நள்ளிரவு எமது ரவாஹா பொது மையவாடியில் "அடக்கமே எமது உரிமை" என்பதை உரத்துச் சொல்ல எமது உறுப்பினர்கள் வெள்ளை சிலையை இறுக்கமாக கட்டி உள்ளோம்.
நிந்தவூர் மக்களே! இவைகள் எல்லாம் சாத்தியமா?
இவற்றால் ஏதாவது நடந்து விடுமா?
என்பதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எம்மால் இவற்றையேனும் செய்ய முடிகிறதே எனும் கொள்கையோடு நாமும் வெள்ளை கொடி ஏற்றுவோம்.
வீடுகள், கடைகள் அனைத்திலும் கபன் துணியில் கொடியேற்று வோம்.
எம் சகோதரர்கள் கபன் துணிகளால் அடக்கம் செய்யப்படும் வரை...
இது உணர்வுக்கான போராட்டம்.
றிஸாலா அமைப்பு
நிந்தவூர்
2020.12.15
No comments