கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக ஏ.எல். முஹம்மத் அஸ்மி, ஆளுனரால் நியமனம்.
நூருள் ஹுதா உமர்.
கடந்த காலங்களில் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராக பதவிவகித்த இலங்கை நிர்வாக சேவை ( தரம் 01 ) அதிகாரி ஏ.எல். முஹம்மத் அஸ்மி, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி இஸ்மாயில் ஆதம் லெப்பையின் புதல்வரான இவர் தனது ஆரம்ப கல்வியை பொத்துவில் மத்திய கல்லூரியிலும், கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும், கற்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக துறையில் இளமானி பட்டத்தை பூர்த்தி செய்தார்.
பொருளியல் துறையில் முதுமானி பட்டத்தை பூர்த்தி செய்துள்ள இவர், இலங்கை நிர்வாக சேவையில் தேர்ச்சி பெற்று கொழும்பு நிர்வாக கல்லூரியில் ஒரு வருடமும், பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்றில் பிரதேச நிர்வாகத்தில் 09 வருடங்களும் கடமையாற்றியுள்ளதுடன் அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளராக கடந்த 08 வருடங்கள் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments