கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் மர்ஹும் பெரிஸ்டர் நெய்னா மரிக்கார் பெயரில் பெண்களுக்கான தொழுகை அறை திறந்து வைப்பு
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான மர்ஹும் பெரிஸ்டர் எம்.எச்.எம். நெய்னா மரிக்காரின் நினைவாக அவரது புதல்வர் அப்துல் ஹஸீப் நெய்னா மரிக்காரின் அன்பளிப்பில் பெண்களுக்கான தொழுகை அறை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழுகை அறையை அப்துல் ஹஸீப் நெய்னா மரிக்கார் (18) இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அவரது பாரியாரும் பங்கேற்றிருந்தார்.
மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.டீ. பாரி, உதவி அதிபர் என்.எம்.எம்.முஜீப் ரஹ்மான், மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அப்துல் ஹஸீப் நெய்னா மரிக்காருக்கு மத்திய கல்லூரியின் சார்பில் பிரதி அதிபரினால் கவிதை பாடப்பட்டு அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது சுகாதார நடைமுறைக்கினங்க மத அனுஷ்ட்டானங்களுடன் மிக எளிமையான முறையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
K.M.C.C. MEDIA UNIT
No comments