காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளியில் "கபன் சீலை போராட்டம்" இன்று முன்னெடுப்பு !
நூருல் ஹுதா உமர்
கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக நாடு முழுவதிலும் "கபன் சீலை போராட்டம்" எனும் மௌனவழி போராட்டம் இனம், மதம், பிரதேசம் கடந்து இலங்கையர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனை ஆதரித்ததாக காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளியில் இன்று (23) மாலை மாவடிப்பள்ளி பாலத்தில் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் "கபன் சீலை போராட்டம்" எனும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான எம்.என்.எம். றணீஸ், முஸ்தபா ஜலீல், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு "கபன் சீலை போராட்ட கோரிக்கையில் இங்கு ஈடுபட்டனர். இந்த போராட்டம் அடங்கலாக நாடு முழுவதிலும் ஆங்காங்கே ஜனாஸா எரிப்புக்கு எதிரான கோஷங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments