ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் வலுவிழந்த பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் வலுவிழந்த பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குறித்த சக்கர நாற்காலிகளை பயனாளிகளுக்கு வழங்கும் ஆரம்ப நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார தலைமையில் (21) திங்கட்கிழமை காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன பணிப்பாளர் எம்.மிஹ்லார், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் நாலக கருணாதாச மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது 125 பயனாளிகளுக்கு சக்கர நாற்காளிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments