தனிமைப்படுத்தலில் இருந்த வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நிவாரணப்பொதி வழங்கிவைப்பு !
நூருல் ஹுதா உமர்.
சமாதானமும், சமூகப்பணியும் அமைப்பின் (PCA) அனுசரனையுடன் கோவிட் -19 கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து காலம் நிறைவடைந்த வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு சமாதானமும்,சமூகப்பணியும் எனும் அமைப்பின் தலைவர் எஸ்.தங்கவேலின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக சமாதானமும், சமூகப்பணியும் அமைப்பின் இணைப்பாளர் டீ .ராஜேந்திரன், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல். முகம்மட் இர்பான் போன்ற பலரும் கலந்துகொண்டு வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பொருட்களை வழங்கிவைத்தனர்.
No comments