புதிய நிபுணர் குழுவை அமைக்க இணக்கம் - ஜனாஸா எரிப்பு கூட்டம், சாதகமின்றி முடிந்தது..!
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பில், இன்று வியாழக்கிழமை (10) பாராளுமன்றத்தில் நடந்த முக்கியத்துவமிக்க கூட்டம், சாதகமின்றி முடிந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்.பிக்களுக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்
எனினும் இக்கூட்டத்தில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது பற்றி எத்தகைய சாதகமான முடிவுகளும் எட்டப்படவில்லை.
இருந்தபோதும் ஜனாஸா நல்லடக்கம் பற்றி ஆராய்வதற்காக புதிய நிபுணர் குழுவை நியமிப்பதற்கு மாத்திரம் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் எம்.பிக்கள் என்ற போதும் தமக்கு இப்பேச்சில் பங்கேற்க அனுமதி கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
No comments