Breaking News

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 2 வைத்தியர்கள் உட்பட 3 தாதிகளுக்கு கொரோனா.

(சர்ஜுன் லாபீர்)

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுனன் தெரிவிப்பு...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட 3 தாதியர்கள் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, கொவிட் - 19 இற்காக சிகிச்சையளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுனன் தெரிவித்தார்.

இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்...

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இதுவரை 363 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளார்கள். எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருக்கும் பொத்துவிலிலிருந்து சிகிச்சை பெற்ற நபரொருவரின் உறவினருக்கும் கொவிட் - 19 தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்த வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு நேற்று (10) வியாழக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் - 19 தொற்றாளாராக இனங்காணப்பட்ட 80 வயதுடையவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் - 19 தொற்றாளார்கள் இனங்காணப்பட்டதையடுத்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மிக விரைவில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை வழமை போன்று சாதாரணமாக பொதுமக்களின் பாவனைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுச் சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் மிகச் சரியான முறையில் கடைப்பிடிக்காததனால்தான் கொரோனா தொற்று வெகுவாக தாக்குகின்றது. உண்மையில் இளைஞர்களையும், சுகதேகிகளையும் இந்த நோய் இலகுவாக கடந்து சென்றாலும் முதியவர்களையும்,நாட்பட்ட வியாதிகளைக் கொண்டவர்களையும் பல்வேறு முறையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் இலகுவாக இந் நோய் தாக்குகின்றது.எமது தாய், தந்தைகள்,பேரன் பேத்திகளை,எமது நெருங்கிய உறவுகளை,மூத்த சொந்தங்களை இழக்கவேண்டி ஏற்படும். எனவே பொது சுகாதார வழிமுறைகளை சரிவர கடைப்பிடித்து நடக்குமாறு பொதுமக்களுக்குஅறைகூவல் விடுக்கின்றேன். என குறிப்பிட்டார்.

சுகாதார துறையினரால் மாத்திரம் இந்த நோயினை நூறு சதவீதமாக கட்டுப்படுத்திவிட முடியாது.சுகாதார துறையுடன் இணைந்ததாக பொது நிர்வாகத் துறையினர்,உள்ளூராட்சி மன்றங்கள்,பொலிசார், முப்படையினர்,ஊடகவியலாளர்கள்,முக்கியமாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிர்வகின்ற அல்லது தீர்மானிக்கின்ற நீதிமன்றங்கள் எங்களோடு இணைந்ததாக செயற்பட்டுக்கொண்டு இருகின்றது.எனவும் குறிப்பிட்டு இருந்தார்.




No comments

note