பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 உபகரணங்கள் வழங்கிவைப்பு
(யாக்கூப் பஹாத்)
கொரோனா வைரஸ் வேகமாகப்பரவி வரும் இவ்வேளையில் சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் நிதி உதவியில் நிந்தவூர் அல் மினா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வழங்கிவைத்தல்
அல் மினா வித்தியாலத்தின் இடம்பெற்றது நிறுவனத்தின் நிந்நவூர் பிரதேச குழுத்தலைவர் கலா பூஷணம் எம்.பீ.ஏ. கபூர் JP யின் வழி காட்டலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் டீ.எம்.எம். அன்சார் மற்றும் நிறுவனத்தின் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் கே .ஐ. றோஹினி ,மினா வித்தியாலய பிரதி அதிபர் வை.ஜாபீர் மற்றும் பிரதேச பொறுப்பாளர் எம்.ஏ.டீ.கபூர் ஆசிரியை சமினா ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
No comments