Breaking News

முல்லேரியா வைத்தியசாலையின் PCR இயந்திரத்தின் நிலை❓🤔

MADURAN KULI MEDIA 
15/11/2020

முல்லேரியா வைத்தியசாலையின் PCR இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் நாளை {16} முதல் வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

முல்லேரியா வைத்தியசாலையில் {PCR} இயந்திரத்தால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் டொக்டர் ஹரித அலுத்கே இன்று வெளிப்படுத்தினார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... 

"கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாவைலயில் {PCR} இயந்திரம் அண்மையில் செயலிழந்தால் {PCR} பரிசோதனைகளை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் காணப்பட்டன.

அதன் பின்னர் அது சரி செய்யப்பட்டு மீண்டும் {PCR} பரிசோதனைகள் இடம்பெற்றன.

தற்போது {PCR} இயந்திரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள் கிடைத்துள்ளது. அதன்படி நாளை முதல் {PCR} பரிசோதனைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்." என்றார்

எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)





No comments

note