நாளை முதல் Lockdown அமுல்படுத்தப்படவுள்ள பொலிஸ் பிரிவுகள்❓
MADURAN KULI MEDIA
15/11/2020
கொழும்பு மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை (16) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவும் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு ஜா-எல, ராகமை, கடவத்த, வத்தளை, மற்றும் பேலியகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் பிரிவுகளை தவிர்ந்த, கம்பஹா மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலை இன்று (15) காலை 5 மணி முதல் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments