பொலிஸ் மா அதிபராக C.D.விக்ரமரத்ன பொறுப்பேற்றாரா உண்மை?🤔
MADURAN KULI MEDIA
27/11/2020
நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக C.D.விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
கடந்த 1986 ஆம் ஆண்டு C.D.விக்ரமரத்ன பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையை ஆரம்பித்தார்.
அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரிகளில் பட்டம் பெற்றுள்ளார்.
C.D.விக்ரமரத்ன கடந்த வருடம் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கும் அதிகக் காலம், பதில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம்.ஸபாக் (ஜவாதி)
No comments