சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சுய தனிமைப்பட்டுள்ளோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
ஐ.எல்.எம் நாஸிம்
கொரோனா தொற்றுடையவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளை அரசாங்கம் அம்பாறை மாவட்டத்தில் வழங்கி வருகின்றன.
இதற்கிணங்க சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள 107 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை பிரதேச செயலளார் எஸ்.எம்.எம்.ஹனீபாவினால் நேற்றுமுன்தினம் (08) வழங்கி வைக்கப்பட்டது.
நேற்று இந்த உணவுப் பொதிகளை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று வரை 107 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக்,சம்மாந்துறை பிரதேச செயலக் கணக்காளர் ஐ.எம் பாரிஸ், கிராமஉத்தியோகத்தர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.
No comments