Breaking News

பேராசிரியர் பட்டம் பெற்றமைக்காக பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவித்த மருதம் கலைக்கூடல்.

நூருல் ஹுதா உமர்

அண்மையில் பேராசியர் பட்டம் பெற்ற இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும்  மருதம் கலைக்கூடலின் நிகழ்வு கடந்த ஞாயிறன்று இரவு  சாய்ந்தமருதில் அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்றது.

பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கருக்கு பொன்னாடை போத்தி, நினைவு சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதேச கல்வி, அபிவிருத்தி, இலக்கிய விடயங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ. முகம்மத் அசாம், கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பேரவையின் நிறைவேற்று சபை உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, அமைப்பின் பிரதித்தலைவர் கலைஞர் என்.எம்.அலிகான், அமைப்பின் செயலாளர் அறிவிப்பாளர் ஐ.ஜாபீர், உட்பட அமைப்பின் நிறைவேற்று குழு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.










No comments

note