வடமேல் மாகாணம் ஆங்கில ஆசிரியர் நியமனம் பெயர் பட்டியல் வெளியீடு
வடமேல் மாகாணத்தில் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கடந்த வருடம் வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன. இதற்கான பரீட்சைகள் நடாத்தப்பட்டு நேர்முகத்தேர்வின் பின்னர் நேற்று 275 பெயர்களின் பெயர் பட்டியலின வடமேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டிருந்தது.
இதன்படி குருநாகல்,புத்தளம் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆங்கில ஆசிரியர்களின் தேவைப்பாடுகளை இனங்கண்டு அடுத்த வருடம் ஆரம்பத்தில் நியமனங்கள் வழங்கப்படும் என வடமேல் மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
S.I.M.Inas( BA ),Dip in teach,PGDE
No comments