காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி எல்லை வீதிக்கு கெங்கிரீட் இடுவதற்கான ஆரம்பகட்ட நிகழ்வு.
நூருல் ஹுதா உமர்.
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மாவடிப்பள்ளி கிழக்கு வரவை எல்லை வீதிக்கு கொங்கிறீட் இட்டு முழுமையாக பூரணப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (25) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் அவ்வீதிக்கான அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட உள்ள இவ்வீதியின் ஆரம்ப வேலைகளை அம்பாறை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.டீ.எம்.றாபி, கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான முஸ்தபா ஜலீல், எம்.என்.எம்.றணீஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் இவ்வீதிக்குரிய உத்தியோகபூர்வமான வேலைகள் எதிர்வரும் ஒருசில தினங்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments