Breaking News

தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு..

(சர்ஜுன் லாபீர்)

பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முறையான தையல் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு பயிற்சி நெறியில் பயன்படுத்தப்பட்ட தையல் இயந்திரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் இன்று(11) நற்பிட்டிமுனை தையல் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத்,தொழில் முயற்சிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் நியாஸ், அல்-கரீம் பவுண்டேஷன் தலைவர் சீ.எம் ஹலீம்,நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் நம்பிகையாளர் சபை செயலாளர் எம்.எல் அஸ்ரப்,அல் கரீம் பவுண்டேசன் செயலாளர் யூ.எல்.எம்.பாயீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் முதல் கட்டமாக 24 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
















No comments

note